உள்ளாட்சி தேர்தலில் பாஜக குறிப்பிடத்தக்க வெற்றி பெற்றுள்ளது. ஆகவே, வெறும் சதவிகித கணக்குகளைச் சொல்லி அதை இன்னும் அலட்சியப்படுத்த முடியாது என்ற பேச்சுகள் பரவலாக விவாதிக்கப்படுகின்றன. உள்ளபடியே தமிழகத்தில் பாஜகவின் வளர்ச்சி குறித்து என்னவென்று பார்ப்போம். உள்ளாட்சி தேர்தலில் பாஜகவின் வெற்றியை விரிவாக பார்ப்போம் 21 மாநகராட்சிகளில் மொத்தமாகவுள்ள 1,374 இடங்களில் பாஜக 22 வார்டுகளை வென்றுள்ளது. 138 நகராட்சிகளில் மொத்தமுள்ள 3,843 இடங்களில் பாஜக 56 இடங்களை வென்றுள்ளது. 490 பேரூராட்சிகளின் மொத்தமுள்ள 7,621 இடங்களில் 230 இடங்களை வென்றுள்ளது. ஆக சதவிகித ...