கருக் கலைப்பை மறுப்பதாலும், சிக்கலுக்கு உள்ளாக்குவதாலும் ஆண்டுக்கு ஒரு லட்சம் பெண்கள் மரணிக்கிறார்கள்! அமெரிக்காவில் கருக்கலைப்பு மறுக்கப்பட்டதற்கு அங்கு பெண்கள் பொங்கி எழுந்துள்ளனர்! கருக்கலைப்பு என்பதை ஏன் பெண்ணின் உரிமையாக கருத வேண்டும்? அமெரிக்காவில் கருக்கலைப்பு செய்வதற்கான உரிமையை அமெரிக்க உச்சநீதிமன்றம் தடை செய்துள்ளது. கருக்கலைப்பு செய்வது தொடர்பான சட்டத்தை,  அந்தந்த மாநிலங்கள் இயற்றிக் கொள்ளலாம் எனவும் தீர்ப்பு அளித்துள்ளது. இதற்கு அங்குள்ள பெண்கள் கடுமையான எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர். வளர்ந்த நாடான அமெரிக்காவிலேயே இந்த நிலை என்றால், நம் நாட்டில் கருக்கலைப்பு வசதிகள் ...

குழந்தை பேறு காலகட்டத்தில் பெண்கள் சந்திக்கும் சவால்கள் அதிகம். அந்த காலகட்டத்தில் பக்குவமாக சாப்பிட வேண்டியவற்றையும், தவிர்க்க வேண்டியவற்றையும் தெரிந்து கொண்டால் சிக்கல்கள் தீரும்! சுகமான குழந்தைப் பேறு கைகூடும்! பருவமடைதலில் தொடங்கி திருமணத்துக்குப் பிறகு குழந்தைப் பேறு, பிரசவம், மெனோபாஸ் என பெண்களின் வாழ்க்கையில் சுமார் 40 ஆண்டுகள் வலிகள் நிறைந்தவையாகவே இருக்கின்றன. ஆக, பெண்கள் ஒவ்வொரு பருவத்திலும் படும்பாடுகளை சொல்லிமாளாது. இதில் ஒரு சிலர் விதிவிலக்கு என்பதை ஏற்றுக்கொள்ள வேண்டும். இன்றைய சூழலில் பெரும்பாலான பெண்கள் இடுப்பு வலியில் தொடங்கி முதுகுவலி ...

21 வயது வரைக்கும் பெண்ணுக்கு திருமணம் செய்யக் கூடாது என்பது முற்போக்கு முகமுடி கொண்ட படு பிற்போக்கான சட்டம்! காதல் மணத்தை கருவறுக்கத் துடிக்கும் சாதி ஆதிக்க வாதிகளுக்கு இது சாதகமாகலாம்! சட்டவிரோத கரு கலைப்புகளை அதிகப்படுத்தலாம்… இன்னும் என்ன விளைவுகளை ஏற்படுத்தும்..? அலசுகிறார் மஞ்சுளா! பெண்களின் திருமண வயதை  உயர்த்த வேண்டும் என்று,  சமதா கட்சியின் ஜெயா ஜெட்லியின் தலைமையிலான பாராளுமன்றக் குழு அரசுக்கு பரிந்துரைத்து உள்ளது. இதுச்  சட்டமானால் 21 வயதுக்கு கீழ் நடைபெறும் திருமணங்கள் குழந்தைத் திருமணம் என்று கருதப்படும். ...

இனி பெண்களுக்கு 21 வயதில் தான் திருமணம் செய்ய வேண்டும் என சட்டம் கொண்டு வருகிறார்கள்! பல வகைகளில் இது நன்மையாக இருந்தாலும், நடைமுறையில் எல்லா சமூகத்திற்கும் சட்டம் சாத்தியப்படுமா..? என துளியும் யோசித்ததாகத் தெரியவில்லை. ஒரு பத்திரிகையாளராக, களப் பணியாளராக சமூகத்தின் பல தளங்களில் பயணப்பட்டவன் என்ற வகையில் இந்த சட்டம் பொதுப் படையாக பார்க்கும் போது சிறந்தது தான் என்றாலும், பெரும்  பாலான மக்களால் மீறப்படக் கூடிய சாத்தியக் கூறுகள் நிறையவே உள்ளது என்பதே நிதர்சனம்! இன்றைய தினம் உண்ணும் உணவின் ...

சென்ற ஞாயிறு மாலை நேரம்..தேனாம்பேட்டை பிரதான பகுதியில் அமைந்திருந்த அலுவலக மேல் மாடியில் அந்த அரங்கநாடகம் துவங்கிய நேரத்தில் உள் நுழைந்தேன். உட்கார இடம் இல்லாமல் நண்பர்களின் துணையுடன் ஓரிடத்தில் அமர்ந்து கொண்டேன். நாடகம் துவங்கிய சில நிமிடங்களில் உள்நுழைந்தேன். ஒவ்வொருநாளும், ஒவ்வொரு நிமிடமும் நம்மைச் சுற்றி நிகழும் நிகழ்வுகளில் ஊடாட்டம் செய்ய வேண்டியது பற்றி படர்ந்து விரிந்து சென்றது ‘உள்ளூரம்’. இது வழக்கமான நாடகம் போல இல்லை, வாழ்க்கையை  நேர்பட பார்க்கத் தரும் ஒரு வாய்ப்பாக இருந்தது. நாடகவியலாளர்அ.மங்கை ஒருங்கிணைப்பில் இந்திய மாணவர் ...