மைக்ரோ பைனான்ஸ் என்ற பெயரில் பெண்கள் சுய உதவிக் குழுக்களுக்கு கடன் தரும் நிறுவனங்கள் கடும் நெருக்கடிகள் தருவதன் மூலம் தமிழகமெங்கும் கொந்தளிப்பு ஏற்பட்டுள்ளன. காவல் நிலையங்களிலும், மாவட்ட ஆட்சியரிடமும் பெண்களின் புகார் மனுக்கள் குவிகின்றன…! பல இடங்களில் போராட்டங்களும் நிகழ்ந்துள்ளன. கொரோனா கொடுங்காலம் வாழ்வாதாரத்தைப் பறித்துவிட்டதால் ஏழை எளிய மக்கள் பரிதவித்து நிற்கின்றனர். கடன் என்ற சிலந்திவலை அவர்களின் கழுத்தை நெரித்துக் கொண்டு இருக்கிறது இதனால் கலங்கிப்போன சிலர் குடும்பத்துடன் உயிரை மாய்த்துக் கொள்கின்றனர். கந்து வட்டி போன்ற சட்டத்துக்குப் புறம்பானவற்றில் மாட்டிக் ...