கேள்வி கேட்டு அறிவை விசாலப்படுத்துவது தான் கற்றலின் அடிப்படை இலக்கணம். ஆனால், ஆசிரியர்களையே கேள்வி கேட்கவோ, விபரம் தெரிந்து கொள்ளவோ வழியற்ற புள்ளி விபரப் புலிகளாக்கி வருகிறது கல்வித்துறை. அரசின் அனைத்து நிர்வாகச் செயல்பாடுகள் நிறைவேற்றத்திற்கும் ஆசிரியர்களே பலியாடுகள்! இதனால், அரசுப் பள்ளி ஆசிரியர்களை அரசாங்கம் அறிவிக்கப்படாத ஒரு கொத்தடிமையாக கருதுகிறதோ என்ற சந்தேகம் கூட அவ்வப்போது வரத் தான் செய்கிறது. பேரு தான் வாத்தியார்! ஆனா, வருஷம் முழுக்க எங்களுக்கு வழங்கப்படும் பணிகளைக் கேட்டால் மலைச்சு போயிடுவீங்க! சட்டமன்ற தேர்தலா? பாராளுமன்ற தேர்தலா? ...
தமிழகப் பள்ளிக் கல்வியின் சவால்கள் : 5 வழக்கமான பாடங்கள்,படிப்புகளுக்கு இடையே ஓவியம், பாடல்,விளையாட்டு, தையல் உள்ளிட்ட கைத்தொழில்கள், தோட்ட பராமரிப்பு, போன்ற வகுப்புகள் வரும் போது மாணவர்கள் அளவிலா மகிழ்ச்சி அடைகிறார்கள்! இதைத் தான் வாழ்க்கை கல்வி என்பார்கள்! நமது தேசத் தந்தை மகாத்மா காந்தி இதைத் தான் ஆதாரக் கல்வி என்றும், அவசியமான செயல்பாடு என்றும் சொல்கிறார்! இந்த ஆனால், தொழில்கல்விக்கான ஆசிரியர்கள் நியமனம், சம்பளம் தொடர்ச்சியான வகுப்புகள் ஆகியவற்றில் தற்போதைய தமிழக அரசுக்கு போதுமான புரிதல் இல்லாத நிலையே உள்ளது. ...