சொகுசான வேலை, நல்ல சம்பளம் என்று தகவல் தொழில் நுட்ப வேலை கருதப்படுகிறது. ஆனால், திணிக்கப்படும் வேலைப் பளூ, நிர்பந்திக்கப்படும் ராஜீனாமா, appraisal என்பதான அநீதி, மதம், சாதி, இனம், பால் என்பதன் பேரால் நிலவும் பாரபட்ச அணுகுமுறைகள்… போன்றவை குறித்து சொல்கிறார் ஐ.டி.தொழிற்சங்கத் தலைவர் அழகுநம்பி வெல்கின். இந்தியாவில், சென்னையில்தான் முதலில் மே நாள் ஊர்வலம் நடந்தது. ஆசியா கண்டத்தில், முதலில் பாண்டிச்சேரியில்தான் எட்டுமணிநேர வேலை சட்டமானது. இந்தியாவில், சென்னையில்தான் முதலில் கணிணியில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கான சங்கம் ஆரம்பிக்கப்பட்டது. அதன் பிறகுதான் பெங்களூர், ...
வட இந்திய தொழிலாளி ஒருவர் உடல் நசுங்கி இறந்துள்ளார். இதைத் தொடர்ந்து கலவரம்! இந்த செய்தி பல ஊடகங்களில் ஆலை நிர்வாகத்திற்கு ஆதரவாக வெளியாகியுள்ளது. சில ஊடகங்கள் செய்தியையே இருட்டடிப்பு செய்துவிட்டனர்! விசிக, நாம் தமிழர் அமைப்புகளோ வெறுப்பு பிரச்சாரம் செய்கின்றனர்! இதை எப்படி அணுகுவது? ஈரோடை தலைமையிடமாக கொண்டு, எஸ்.கே.எம்., என்ற புகழ் பெற்ற நிறுவனம் இயங்கி வருகிறது. பூர்ணா ஆயில் என்ற பெயரில் அரிசி தவிடு எண்ணெய், தேங்காய் எண்ணெய், கடலை எண்ணெய் உள்ளிட்ட பல வகை எண்ணெய்கள் உற்பத்தி, கால்நடை ...
சொர்க்கலோகம் என்பது இது தானா? என்று மிரளக்கூடிய சகல ஆடம்பர வசதிகளுடன் சமூகத்தின் பெரிய கோடீஸ்வரர்கள்,செல்வாக்கானவர்களைக் கொண்டது ஜிம்கானா கிளப்! ‘எத்தனை பெரிய மனிதர்களுக்கு எத்தனை சிறிய மனம்..!’ என்கிற ரீதியில், இங்கு தொழிலாளர்கள் படும்பாட்டைக் கேட்டால்…! நீதியரசர் அரிபரந்தாமன் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க தமிழர்களின் பாரம்பரிய உடையான வேட்டி சட்டை அணிந்து சென்ற ஒரே காரணத்திற்காக இந்த கிளப் வாசலிலேயே தடுத்து நிறுத்தப்பட்டார். அப்போதுதான் முதன்முதலாக “ஜிம்கானா கிளப்” பெரிய அளவில் வெளிச்சத்திற்கு வந்தது. தமிழர்களின் பாரம்பரிய உடையான வேட்டி அணிந்தால்.. விரட்டுவீர்களோ..என ...
மாவட்ட ஆட்சியர்கள், காவல்துறையினர், அமைச்சர்கள், சட்டங்கள்.. ஆகிய எதுவும், யாரும் நெருங்க முடியாத சர்வ அதிகாரத்துடன் வெளிநாட்டு நிறுவனங்கள் இயங்குகின்றன. தொழிலாளர்கள், அவர்களுக்கு பழுதடைந்தால் வீசி எறிந்து விடத்தக்க நடமாடும் இயந்திரங்களே..! தொழில் தொடங்க சிறப்பு பொருளாதார மண்டலங்கள் அமைத்து தந்து வெளி நாட்டு நிறுவனங்களுக்கு பல நூறு ஏக்கர் நிலங்கள் வழங்கி, அந்த நிறுவனங்களுக்கு சலுகை விலையில் மின்சாரம் உள்ளிட்ட பலவும் செய்து தந்து ஊக்குவிக்கின்றன மத்திய மாநில அரசாங்கங்கள்! ஆனால், இப்படி தங்களுக்கு தரப்பட்ட சலுகைகளைக் கொண்டு நம் நாட்டிற்குள்ளேயே ஒரு ...
பொதுத் துறை வங்கிகளை தனியார்மயமாக்கியே தீருவது என்பதில் படிப்படியாக முன்னேறி வருகிறது பாஜக அரசு. அரசுத்துறை வங்கிகளை அணுவணுவாக பலவீனப்படுத்தி, தனியார் வங்கிகளை மட்டுமே தழைத்தோங்கச் செய்வதே அரசின் திட்டமாக அரங்கேறி வருகிறது! சமீபத்தில் கூட ஐடிபிஐ வங்கியின் பங்குகளை விற்ற நிலையில், அவ்வங்கி தனியார் மயமாக்கப்பட்டது. தற்போது நடந்து கொண்டிருக்கும் பாராளுமன்ற குளிர்கால கூட்டத் தொடரில் பொதுத் துறை வங்கிகளில் அரசின் பங்கை குறைப்பதற்கான சட்டதிட்டங்களை அரசு கொண்டு வர திட்டமிட்டு உள்ளது. இதை எதிர்த்து தான் இந்தியா முழுமையும் வங்கி ஊழியர்கள் ...
இருப்பதிலேயே மிகக் கடினமான, சவாலான பணி என்பது துப்புரவு தொழில் தான்! ஆனால், மிகக் குறைவான சம்பளம் பெறுவதும் துப்புரவு தொழிலாளிகள் தான்! தற்போது அந்த சம்பளத்தையும் குறைக்க திட்டமிட்டுள்ளது தான் அதிர்ச்சியளிக்கிறது! ”இப்ப வாங்குற சம்பளத்தை தொடர முடியாது, இது தான் கூலி இருந்தா இரு..’’ என்று சொல்லும் ஆணவத்தை தமிழக அதிகாரிகளுக்கு தந்தது யார்? ”துப்புரவு தொழிலாளியாக வாழ விரும்பிய காந்தி பிறந்த அக்டோபர் இரண்டாம் நாளில் தமிழக மாநகராட்சி, நகராட்சிகளில் பணிபுரியும் துப்புரவு பணியாளர்களின் சம்பளத்தைக் குறைக்க நகராட்சிகளின் நிர்வாக ...
சத்துணவு, அங்கன்வாடி, ரேஷன்கடை போன்ற பல திட்டங்களில் தமிழ்நாடு இந்தியாவிற்கே முன்னோடியாகும்! நம்மைப் பார்த்து மற்ற மாநிலங்கள் பின்பற்றின. தற்போது நீட் தேர்வு எதிர்ப்பிலும் இந்தியாவிற்கே முன்னோடி முன்னோடியாக உள்ளது! ஒன்றிய அரசின் வேளாண் சட்டங்களை விவசாயிகளுக்கு ஆதரவாக தமிழக அரசு எதிர்த்ததை போல, தொழிலாளர் விரோத சட்டங்களையும் எதிர்க்க வேண்டும் என்பது தமிழக தொழிற்சங்கங்களின் எதிர்பார்ப்பாகவுள்ளது. தமிழ்நாட்டில் பல ஆண்டுகளாக கட்டடத் தொழிலாளர், ஆட்டோ தொழிலாளர், விவசாயத் தொழிலாளர், வீட்டுவேலை செய்பவர்களின் நலனுக்காக அமைப்புச்சாரா தொழிலாளர் நல வாரியங்கள் செயல்பட்டு வருகின்றன. இவைகளைப் ...
இந்திய ராணுவத்திற்கானவற்றை உற்பத்தி செய்யும் ஆவடி டேங்க் தொழிற்சாலை உள்ளிட்ட 41 ஆலைகளை தனியாருக்கு தாரை வார்க்கிறது பாஜக அரசு. இதை தொழிலாளர்கள் எதிர்த்து போராடினால் சிறை தண்டனை, அவர்களை ஆதரிப்போருக்கும் சிறை தண்டனையாம்! 75 ஆண்டு கால சுதந்திர இந்தியா கட்டிக் காப்பாற்றிய தொழிற்சங்க ஜனநாயக உரிமைகளை ஒழித்துக் கட்ட ஏழே நிமிடத்தில் ஒரு சட்டத்தை பாராளுமன்றத்தில் நிறைவேற்றியது பாஜக அரசு! இதன் படுபாதகங்களை பார்ப்போமா..? ஜனநாயக உரிமையை பறிக்கும் வகையில் ஒன்றிய அரசு ‘அத்தியாவசியப் பாதுகாப்பு சேவைச் சட்டத்தை’ (Essential Defence ...
எட்டு மணி நேர வேலை நேரம் பறிக்கப் பட்டு விட்டது.இன்றைய மத்திய, மாநில அரசுகள் தொழிலாளர்களின் நியாயமான பல கோரிக்கைகளை கண்டுகொள்வதே இல்லை. ஏற்கனவே இருந்த 44 தொழிலாளர் சட்டங்களை (Act) சுருக்கி 4 சட்டத்தொகுப்பாக (Code) மாற்றிவிட்டது. இதனால் சம்பளம் என்பதன் வரையறை மாறுகிறது. தொழிற்சங்க உரிமைகள் மட்டுப் படுத்தப்படுகின்றன. தொழிலாளர்களோடு நடத்தப்படும் முத்ததரப்பு குழுக்கள் கூடுவதே இல்லை. பொதுமுடக்க காலத்தில் புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் சந்தித்த அவலம் எல்லோருக்கும் தெரியும். இதனை எப்படி எதிர்கொள்ளப் போகிறார்கள் தொழிலாளர்கள் ? “அடிமைகளை கொலை ...
கொரோனாவின் தாக்கம் வீரியம் அடைந்து வரும் இந்த வேளையில், பெருநகரங்களின் ரயில் நிலையங்கள் புலம் பெயர் தொழிலாளர்களால் நிரம்பி வழிகிறது. கடந்த ஆண்டை போல் ஊரடங்கு அறிவிப்பதற்கு முன் சொந்த ஊர் போய் சேர்ந்துவிட வேண்டும் என்ற பதட்டமும் அச்சமும் தொற்றியுள்ளது. அவர்களின் அச்சத்தை போக்கி, பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டிய மத்திய, மாநில அரசுகள் என்ன செய்கின்றன..? புலம்பெயர் தொழிலாளர்கள் தங்களுடைய வேலை செய்யும் இடங்களில் இருந்து சொந்த ஊர் திரும்பி ஓராண்டு நிறைவடைந்துவிட்டது . ஆனாலும், அவர்களின் துயரங்கள் தொடர்ந்து கொண்டேதான் ...