டாக்டர் அம்பேத்கரை சமூகப் போராளியாக, சட்ட நிபுணராக, அரசியல் தலைவராக, அமைச்சராகத் தான் இந்திய மக்கள் அறிவர் ! அண்ணல் அம்பேத்கர், ‘தலைசிறந்த பொருளாதார மேதை’ என்பதை பலர் அறியார் ! நோபல் பரிசு பெற்ற அமெர்த்தியா சென் அவர்களின் மொழியில் சொன்னால், “இந்தியாவின் முற்போக்கு பொருளாதாரத்தின் தந்தையே டாக்டர் அம்பேத்கர் தான்.” கொலம்பியா பல்கலை வளாகம் அளப்பரிய சுதந்திரத்தை அவருக்கு வாரி வழங்கியிருந்தது.  தலைசிறந்த பல்கலைக் கழகம் தனக்கு வழங்கிய வாய்ப்பை முழுமையாக அவர் பயன்படுத்திக் கொள்ள விழைந்தார். கொலம்பியா பல்கலைக் கழகத்தில் ...

“எவ்வளவு பெரிய தடுப்புச்சுவரும் பெருந்தொற்றிலிருந்து மக்களை பாதுகாக்காது. உலகினரின் ஒருங்கிணைந்த நடவடிக்கை மட்டுமே -இப்பொழுது தாக்கும் கொரோனாவாகட்டும் அல்லது எதிர் காலங்களில் தோன்றும் பெருந்தொற்றாகட்டும்-  மக்களை பாதுகாக்கும்.” என்று அமெரிக்க அதிபர் ஜோ பைடன்  G7  மாநாட்டில் கூறியிருக்கிறார். எல்லோரும் பாதுகாப்பாக இருந்தால் மட்டுமே நான் பாதுகாப்பாக இருக்க முடியும் என்ற ஞானம்தான் அவரை இவ்வாறு பேசத்தூண்டியிருக்கிறது. அனைத்து நாடுகளும் இணைந்து செயல்பட அடித்தளமாக அமைய வேண்டியது விஞ்ஞான மனோபாவம்  என்ற ஸைன்டிபிக் டெம்பர்   மட்டுமே. வெறும் மந்திர  தந்திர செயல்களால் அல்லது வெற்று கோஷங்களினால் பெருந்தொற்றை வெல்ல முடியாது என்பதை மோடி ...

இயற்கை தான் நம்மை வாழ்விக்கிறது! அந்த இயற்கைக்கு நாம் என்ன செய்யப்போகிறோம்..? சுற்றிலுமுள்ள இயற்கையை தெரிந்தும், தெரியாமலோ  அழித்து கொண்டே  இருப்பதால் ஏற்படும் பாதிப்புகள் என்ன..?  புதிய கிருமிகளின் தாக்கங்களுக்கும், சுற்றுச் சூழலுக்கும் தொடர்பு உண்டா..? இயற்கையை பாதுகாக்க நமக்கான பொறுப்புகளை உணரவும், உயிரினங்கள், மரங்கள்  சூழ இருப்பதால் நமக்கு ஏற்படும் நன்மைகளை அறியவும்  விழிப்புணர்வு ஏற்படுத்தும் நாள் தான்  ஜூன் 5.  உலக சுற்றுச்சூழல் தினம்! நம்முடைய எந்த செயலும் அடுத்தவரை பாதிக்க கூடாது என்பது போல் அந்த செயல் இயற்கையையும் பாதிக்க ...