வழக்கத்திற்கும் அதிகமாகவே இந்த சட்டமன்ற கூட்டத் தொடர் குறித்த விமர்சனங்கள் பொது வெளியில் விவாதிக்கப்பட்டு வருகின்றன! திமுக அரசின் மீதான மக்களின் எதிர்பார்ப்புகளும், நம்பிக்கைகளும் அதிகரித்துள்ளதன் விளைவாகவே இதை பார்க்க முடிகிறது. இன்றைய கவர்னர் உரையில் வரவேற்கதக்க முதல் அம்சம் ஒரு திராவிட இயக்க அரசாங்கத்திற்கு இசைவாக கவர்னர் பேசியுள்ளார் என்பதே! எனினும், இது சந்தர்ப்ப சூழலுக்காக அவரது உதடு உரைக்கும் வார்த்தைகளே என்ற புரிதல் இல்லாமல் நாம் புளகாங்கிதமடைந்துவிடக் கூடாது! நீட் தேர்வு ரத்து முயற்சிகள், உழவர் சந்தை, விவசாயத்திற்கு தனி பட்ஜெட், ...