தமிழ்நாட்டில் பதிப்பகங்களுக்கு பஞ்சம் இல்லை. ஆனால், அதில் நேர்மையாக எழுத்தாளனுக்கு பணம் கொடுப்பவர்களுக்கு தான் பஞ்சமோ பஞ்சம்! உச்சபட்ச பித்தலாட்டமும், சுரண்டலும் நிலவும் துறைகளில் பதிப்பகத் துறை முக்கியமானது. சொன்னால் நம்பமாட்டீர்கள், பல அறிவாளிகளை எல்லாம் அதோகதிக்கு ஆளாகியுள்ளார்கள்! நல்ல வேளையாக எழுத்தாளர் ஜெயகாந்தனுக்கு நேர்மையான மீனாட்சி புத்தக நிலையத்தார் அமைந்தனர்! இந்த பதிப்பகம் வருடம்தோறும் ஜே.கேவுக்கு லட்சக்கணக்கில் ராயல்டி கொடுத்தனர். அவர் இறந்த பிறகும் விற்பனையில் 15% ராயல்டி இன்றும் தந்து வருகின்றனர். ஆனால், பிரபல எழுத்தாளர் சுஜாதாவிற்கு அப்படி அமையவில்லை.மென்மையான சுபாவமும், ...

அப்பாவிகளை குற்றவாளியாக சித்தரிக்க, சம்பவங்களை ஜோடித்து எழுதும் காவல்துறை ரைட்டர் பணியில் ஒரு மனசாட்சியுள்ள போலீஸ்காரன் எதிர்கொள்ளும் உளவியல் போராட்டங்களை வெகு துல்லியமாக காட்சிப்படுத்திய வகையில், புதிய விவாதங்களை எழுப்புவதோடு, மனசாட்சியை உலுக்குகிறது..! காவல் துறையின் சீரழிவை எழுத்தர் ஒருவரின் பார்வையில் விவரிக்கிறது, நீலம் தயாரிப்பில் இயக்குனர் ப்ராங்க்ளின் ஜேக்கப் இயக்கத்தில் வெளியாகியுள்ள ‘ரைட்டர்’ திரைப்படம்! படத்தின் திரைக்கதையில் இது நல்ல சினிமா என்பதற்கான  உதாரணங்கள்  நிறையவே வெளிப் படுகின்றன! இதற்கு முன் தமிழில் போலீஸ் கதைகள் என்பவை எப்படிப்பட்டவையாக இருந்தன? ரஜினியின் அலெக்சாண்டர், கமல் ...

டாக்டர் அம்பேத்கரை சமூகப் போராளியாக, சட்ட நிபுணராக, அரசியல் தலைவராக, அமைச்சராகத் தான் இந்திய மக்கள் அறிவர் ! அண்ணல் அம்பேத்கர், ‘தலைசிறந்த பொருளாதார மேதை’ என்பதை பலர் அறியார் ! நோபல் பரிசு பெற்ற அமெர்த்தியா சென் அவர்களின் மொழியில் சொன்னால், “இந்தியாவின் முற்போக்கு பொருளாதாரத்தின் தந்தையே டாக்டர் அம்பேத்கர் தான்.” கொலம்பியா பல்கலை வளாகம் அளப்பரிய சுதந்திரத்தை அவருக்கு வாரி வழங்கியிருந்தது.  தலைசிறந்த பல்கலைக் கழகம் தனக்கு வழங்கிய வாய்ப்பை முழுமையாக அவர் பயன்படுத்திக் கொள்ள விழைந்தார். கொலம்பியா பல்கலைக் கழகத்தில் ...

கல்விப் பின்புலமோ, சமூக பின்புலமோ,பொருளாதார பின்புலமோ இல்லாமல் ஒரு எளிய மனிதானாலும் கூட மிகப் பெரிய ஆய்வு நூல்களை படைத்தளிக்க முடியும் என்பதற்கு பெ.சு.மணி என்கிற பெண்ணாத்தூர் சுந்தரேசன் மணி ஒரு எடுத்துக்காட்டாகும்! அவர் ஒரு சுயம்பு! தன்னுடைய இடையறாத ஆய்வின் மூலம் தமிழ் சமூகத்தை முன்னோக்கி நகர்த்தியவர்களில் பெ.சு.மணி குறிப்பிடத் தக்கவர்! தான் வாழும் சமூகத்திற்கு தேவையான ஆய்வுகளை தானே முன்னெடுத்து பிரமிக்கதக்க ஆய்வு நூல்களை தமிழ்ச் சமூகத்திற்கு தந்துள்ளார் பெ.சு.மணி! அந்த நாட்களில் நான் துக்ளக்கில் சில பழைய சுதந்திர போராட்டகால ...

அன்றைய தமிழகத்தில் தமிழ் தேசிய இயக்கங்களுக்கும், திராவிட இயக்கங்களுக்கும் டாக்டர்.மு.வவின் நூல்கள் ஒளிவிளக்காக திகழ்ந்தன. பெருந்திரளான இளைஞர்கள் மு.வவை தங்கள் கதாநாயகனாக, வழிகாட்டியாக கொண்டிருந்தனர். திருமணங்கள், பிறந்த நாட்கள் ஆகியவற்றுக்கு மு.வரதராஜனார் நூலை பரிசளிப்பதில் அளவில்லா ஆனந்தம் அடைந்தனர்..! தமிழன்னையின் தவப்புதல்வர்களில், மு.வ‌.என்று தமிழ் கூறும் நல்லுலகில் அன்புடன் அழைக்கப்படும்  டாக்டர் மு.வரதராசனாருக்கு தனிச்சிறப்பு உண்டு. அவருடைய வாழ்க்கை வரலாற்றை உள்வாங்கி செயல்படும் இளைஞர்கள் தங்கள் தனித்திறமையை உணர்ந்து விடாமுயற்சியையும் கடின உழைப்பையும் மூச்சுக் காற்றாகக் கொண்டு மகத்தான வெற்றி பெறுவார்கள். இது உறுதி. ...

யார் ஒருவரையும் புகழ்ந்து பேசவோ,எழுதுவதிலோ நான் எப்போதும் ஆர்வம் காட்டியதில்லை! ’பெரியாரை வியத்தலும் வேண்டாம், சிறியாரை இகழ்தலும் வேண்டாம்’ என்பது நம் முன்னோர்கள் உணர்த்தியது.அதுவே என்  நிலைப்பாடுமாகும்! எனினும் ஒருவரிடம் காணப்படும் அரிய பண்புகளை, சிறந்த குணநலன்களை சொல்வதன் மூலம் இந்த சமூகம் அதை முன்மாதிரியாகக் கொண்டு பலன் பெறும் எனில்,அதற்கான முழு தகுதியும் கொண்ட ஒருவரை உரிய முறையில் போற்றி, பாராட்டுவதும் ஒரு சமூக கடமையே! அந்த வகையில் நான் ஒரு பதினைந்து ஆண்டுகளாக சிவகுமார்  அவர்களிடம்  பழகிவருவதைப்  இந்த 79வது பிறந்தநாளன்று பகிர்ந்து கொள்ள ...