சினிமா என்பது கூட்டு முயற்சி! ஒரு படைப்புக்கு ஒருவரே ஒட்டுமொத்த உரிமை கொண்டாடுவது அறியாமை, ஆணவம், பேராசை! கோடிக்கோடியாக சம்பாதித்துவிட்டு போங்கள். பெயர்,புகழ் எல்லாம் இருக்கட்டும். அதை இன்னொருவனின் படைப்பை திருடித் தான் செய்ய வேண்டுமா..? அந்தக் கதை எழுதிய படைப்பாளிக்கு உரிய அங்கீகாரம் தர மறுத்தால் அப்புறம் நீ என்ன பெரிய கலைஞன்.., இயக்குனர்..? உண்மையில் திருடன் தானே..! பர்ஸை திருடியவன் பிக்பாக்கெட் திருடனாகிறான். கதையை திருடியவன் பிக்பாஸ் ஆகிறான்..! ஒரு படத்தின் வெற்றிக்கு கதை தான் அடித்தளம்! சினிமா என்ற உருவத்தின் ...