மேட்டுக்குடியினர் மட்டுமே பங்கு பெற்று வந்த இந்திய கிரிக்கெட்டில் கிராமத்து எளிய மனிதனுக்கும் இடம் கிடைக்கும் காலம் கனிந்துவிட்டதன் எடுத்துகாட்டு தான் ’யாக்கர் ராஜா’ நடராஜன்! காலபரிணாம வளர்ச்சி அதன் போக்கில் பல தடைகளை தகர்த்து அடித்தளத்தில் உள்ள திறமையாளர்களையும் அடையாளம் கண்டு வருகிறது..! வேகப் பந்து வீச்சில் விரும்பத் தகுந்த ஆட்டக்காரராக வளர்ந்து வரும் நடராஜன் வருங்கால நம்பிக்கை நட்சத்திரம் என்பதில் சந்தேகமில்லை! சேலம் மாவட்டத்தில் சின்னப்பம்பட்டி என்ற சிறிய கிராமத்தில் மிகவும் ஏழ்மையான குடும்பத்தில் பிறந்து, அங்குள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் ...