தமிழக விவசாயிகளுக்குத் தொடரும் தொல்லைகள்…! காவிரியில் மேகே தாட்டு என்ற இடத்தில் 48 டிஎம்சி கொள்ளளவு கொண்ட இரு அணைகளைக் கட்டப் போவதாக கர்நாடகா முதலமைச்சர் எடியூரப்பா அண்மையில் தெரிவித்துள்ளார். இதன் மூலம் தமிழகத்திற்கு இனி சொட்டுத் தண்ணீர் கூட செல்லக் கூடாது என கர்நாடகம் திட்டமிடுகிறது…! இது வரையிலான கர்நாடகாவின் அநீதிகளும், நமது இயலாமைகளும் மேலும் தொடருமா..?  நாம் செய்ய வேண்டியது என்ன..? ஆனால், இது, எந்த விதத்திலும் தமிழகத்தை பாதிக்காது என விளக்கம் அளித்துள்ளார், எடியூரப்பா! # கர்நாடகாவுக்கு உரிமையான 270 ...