இன்னும் அவரது மறைவு நம்பமுடியாத செய்தியாகவும், மீள முடியாத துக்கமாகவும் என்னை ஆக்கிரமித்துள்ளது..! அப்துல் ஜப்பார் அய்யாவை அவரது மகன் ஆசிப் மீரானின் வழியேதான் நான் அறிந்தேன். கிரிக்கெட் வர்ணனையாளர் என்னும் அடைமொழியைத் தாண்டிய அவருடைய இலக்கியப் பங்களிப்பை ‘காற்று வெளியினிலே’ நூலின் வழியே நான் அறிய நேர்ந்தது! சுயசரிதம் போல் அமைந்த அந்நூலில், அவருடைய இளவயது ஆர்வங்களும் ஆசைகளும் வெளிப்பட்டுள்ளன. இலங்கை வானொலியில் நாடக நடிகராக வாழ்வைத் தொடங்கிய அப்துல் ஜப்பார், அதன்பின் பல்வேறு பரிமாணங்களை எடுத்திருக்கிறார். ஊடக மொழிக்கு கவர்ச்சியையும், வசீகரத்தையும் ...