பதவி அரசியல் கொள்கை அரசியல்வாதிகளைக் கூட கொன்று விடுகிறது! அதிகார அரசியல் ஆகச் சிறந்த லட்சியவாதிகளைக் கூட அழித்து உள் வாங்கி விடுகிறது என்பதற்கு கணேசமூர்த்தி தற்கொலையே சாட்சியாகும். பல போராட்டக் களங்களை கண்டவர். மாற்று அரசியலைக் காண விழைந்து ஏமாற்று அரசியலில் பலியானார்! சோசலிச லட்சயத்தில் ஈர்க்கப்பட்டு திராவிட கொள்கைகளில் திளைத்து, உணர்வில் தமிழ் தேசியவாதியாக செயல்பட்ட அவரது பயணம், பதவி பித்தால் தடம் மாறி படுகுழிக்குள் தள்ளிவிட்டது! இயற்கை வேளாண்மையில் ஈடுபாடுள்ளவர்! விவசாயப் பிரச்சினைகள் அனைத்திற்கும் குரல் கொடுத்து களம் கண்டவர்! ...