பாஜகவின் “புனிதர்” வேடம் கலைந்து, கிரிமினல் தோற்றம் தேர்தல் பத்திர விவகாரத்தில் அம்பலப்பட்டுள்ளது. லஞ்சத்தையே சட்ட பூர்வமாக்கி, பிளாக்மெயில் செய்து பணம் பறிப்பதை நியாயப்படுத்தி சரித்திரம் படைத்துள்ளது! எதிர்கட்சிகளை முடக்கி, குறுக்கு வழியில் தேர்தலில் வெற்றி பெறத் துடிக்கிறது; ஊழலுக்கு எதிரான இந்தியா – India Against Corruption- என்ற போராட்டத்தில் ஊடுருவி வளைத்து, அதன் மூலம் அரசியல் ஆதாயம் அடைந்தது பாரதீய ஜனதா கட்சி. ‘ நான் லஞ்சம் வாங்க மாட்டேன், யாரையும் லஞ்சம் வாங்கவும் அனுமதிக்க மாட்டேன் ‘ என்று வீர ...