பல்லாயிரக்கணக்கில் ஆசிரியர் பணி இடங்கள் பத்தாண்டுகளாக நிரப்படவில்லை. 3,800 பள்ளிகள் ஓராசிரியர் பள்ளிகளாக உள்ளன! இந்தச் சூழலில், வறுமைக் கோட்டில் வாழும் ஒரு சம்பளத்தை ஆசிரியர்களுக்கு நிர்ணயித்து,  நிரந்தரமில்லா வேலை என்றால், கல்வித்துறையின் கதி இது தானா? இடை நிலை ஆசிரியர்களுக்கு 7,500, அடுத்த நிலைக்கு 10,000, முது நிலை ஆசிரியர்களுக்கு 12,000 சம்பளமாம்! படிப்பறிவில்லா கட்டிடத் தொழிலாளி கூட ஒரு நாள் ஊதியம் 1000 த்தில் இருந்து 1,500 வரை பெறுகிறார்! இதைவிட குறைந்த கூலிக்கு ஒரு தொழிலாளியை வேலைக்கு அழைக்க முடியாது. ...