மோடியின் சங்கல்பத்ராவாம்! அடாவடித்தனம், அராஜகம், அநீதியை சட்டமாக்கல் என்ற இலக்கை நோக்கி பாஜகவின் தேர்தல் அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது. மக்கள் எதிர்பார்ப்புகள் என்னவென்றே தெரியாமல் தங்கள் மனதில் உள்ள குரூரங்களையே தேர்தல் வாக்குறுதிகளாக தரும் ஒரே கட்சி, பாஜக தான்; எதைக் கொண்டு இந்த நாட்டில் பிளவையும், பிரிவுகளையும் உருவாக்க முடியுமோ அதை மையப்படுத்தி வெளியிடப்பட்டுள்ள வாக்குறுதி தான், ‘நாடு முழுவதும் பொது சிவில் சட்டம் அமல்படுத்தப்படும்’ என்பதாகும். இப்ப, பொது சிவில் சட்டம் இல்லாமல் இருப்பதால் இந்த நாட்டில் என்ன குறைந்துவிட்டது…? ஒரு குறிப்பிட்ட ...