100 கோடி முதலீடு இருந்தால் தான் சினிமா எடுக்கணுமா? சிறிய பட்ஜெட் படங்களே கூடாதா? மலையாளம், கன்னடம்,தெலுங்கு, வங்க மொழிகளின் சிறிய பட்ஜெட் படங்கள் அங்கு அமோக வரவேற்பு பெறுகின்றன. இங்கு சிறிய பட்ஜெட் படங்கள் திரைக்கு வராமல் முடங்கும் சூழல் எப்படி ஏற்பட்டது? தமிழ் சினிமாவை கட்டுப்படுத்துவது யார்? திரைப்பட நடிகரும், தயாரிப்பாளருமான விஷால், “ஒரு கோடி முதல் 4 கோடி வரை பட்ஜெட் உள்ள படங்களை எடுக்க திரைத்துறைக்கு யாரும் வராதீர்கள். அதற்குப் பதில் அந்த பணத்திற்கு நிலம் வாங்கிப் போடுங்கள். ...