ஓர் இனக்குழு தமது ரகசியத் திட்டங்களால் ஒரு நாட்டை ஆள்வதை, ‘டீப் ஸ்டேட்’ (Deep State) என்பர். அத்தகைய ‘டீப் ஸ்டேட்’டாக இந்தியா உருமாறி வருகிறதா..? ஒரு முன்னாள் காதலியை பழி வாங்க காதலன் செய்த சதிச் செயலில் பாஜக அரசு பங்கெடுத்ததை என்னென்பது? இதன் பின்னணியை தெளிவாக பார்ப்போம்; திரிணமூல் காங்கிரஸ் எம்.பியான மஹுவா மொய்த்ரா மக்களவையில் கடந்த நான்கரை ஆண்டுகளாக துணிச்சலான பல கேள்விகளை எழுப்பியுள்ளார். இதில் பெரும்பாலான கேள்விகள் அதானி குழுமம் தொடர்பானவை. பிரதமர் நரேந்திர மோடி, தொழிலதிபர் அதானிக்கு ...