இக்கால இளைய தலைமுறையினருக்குப் பெருமளவு அறிமுகமில்லாத, பெயரளவில் மட்டுமே கேட்டுணரப்பட்ட ஒரு இயற்கையின் அதிசயம்தான் மின்மினிப் பூச்சிகள். “நெருப்பில்லாமல் வெளிச்சமா?… மின்சாரம் இல்லாமல் லைட்டா?… அதுவும் ஒரு பூச்சியின் உடல் மீதா?…” என்று நடப்புச் சமுதாயத்தினர் ஆச்சரியப்படும் இயற்கையின் அற்புதப் படைப்புதான் இந்த வெளிச்ச ஜீவன். மின்மினிப் பூச்சி அல்லது கண்ணாம் பூச்சி (Firefly) என்பது வண்டு வகையைச் சார்ந்த ஒரு பூச்சியாகும். இதை மினுக்கட்டான் பூச்சி, லைட்டு பூச்சி என்றெல்லாம் அழைப்பர். உண்மையில் இந்த மின்மினிப் பூச்சிகள் வண்டுக் குடும்பத்தைச் சேர்ந்தவை. இதன் ...