நூறு நாள் வேலை திட்டத்தில் விவசாயக் கூலிகளுக்கு பணமில்லை என சொல்லும் பாஜக அரசு, வங்கியில் உள்ள மக்களின் சேமிப்புக்களையும், மக்களை வாட்டி வதைத்து வாங்கும் வரிப் பணத்தையும் கார்ப்பரேட் முதலாளிகளுக்கு கடனாக கொடுத்து அதை வாராக்கடனாக தள்ளுபடி செய்துள்ளதை விளக்கும் கட்டுரை; இந்தியாவில் பல்வேறு திட்டங்களுக்கு பணம் இல்லை. நூறு நாள் வேலை செய்தவர்களுக்கு சம்பளம் கொடுக்காமல் பல மாதங்களாக போராட்டம் செய்து வருகிறார்கள். மாநில அரசுகளுக்கு கொடுக்கவேண்டிய பங்கீடு தொகை உரிய காலங்களில் வழங்கபடாமல் இருக்கிறது. மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு ரூ. ...