நாடாளுமன்ற தேர்தல் அதிமுகவிற்கு அதிக பாதிப்புகளையும், பாடங்களையும் தந்துள்ளது. ஒரு அரசியல் கட்சிக்கு வெற்றி, தோல்விகள் சகஜம் என்றாலும், பாஜகவிடம் இருந்து விலகி தனித்துவம் கண்டது சிறப்பானதே என்றாலும், இந்த தோல்வி என்பது அதிமுகவின் தவறுகளால் ஏற்பட்டதே! இதற்கு ஒற்றுமைத் தீர்வாகுமா? மக்களவை தேர்தலில் தமிழகத்தில் 35 தொகுதிகளில் போட்டியிட்ட அதிமுக 14 இடங்களில் மட்டுமே இரண்டாம் இடத்திற்கு வந்துள்ளது. இதில் இரண்டு தொகுதிகளில் 4 லட்சத்து சொச்சம் வாக்குகளும், ஐந்து தொகுதிகளில் 3 லட்சத்து சொச்சம் வாக்குகளும் பெற்று நல்ல போட்டியைத் தந்துள்ளது. ...