பாஜக கட்டமைக்க விரும்பும் ராம ராஜ்யம் குறித்த புரிதலின்றி, ராமர் கோவில் விவகாரத்தில் எதிர்கட்சிகள் தடுமாறுகின்றன! ராமர் கோவில் உருவாக்கம் என்பது எதிர்கால இந்தியாவின் அரசியல், சமூகத் தளத்தில் ஏற்படுத்தப் போகும் மாற்றங்கள் என்ன? பாஜகவின் வெற்றிகளுக்கும், எதிர்கட்சிகளின் பின்னடைவிற்கும் இதோ விடை; ராமர் கோவிலை நிராகரித்தால், இந்துக்களால் நாம் நிராகரிக்கப்பட்டு விடுவோமோ என்ற அச்சம் எதிர்கட்சி தலைவர்களின் அடிமனதை ஆட்டுவிக்கிறது! இந்த 32 ஆண்டுகளில் எதிர்கட்சிகள் மனதில் இப்படி ஒரு பயத்தை தோற்றுவித்திருப்பது தான் இந்துத்துவ அரசியலின் வெற்றியாகும்! பாபர் மசூதி இடிக்கப்பட்ட ...