அரசு போக்குவரத்தை தேர்தல் அரசியலுக்கு பயன்படுத்தி, அதிகாரத்திற்கு வந்துள்ள தற்போதைய திமுக அரசு, போக்குவரத்து கழகங்களை சீரழித்து வருகிறது. தொழிலாளர்கள் நலன்கள் படுபாதாளத்திற்கு தள்ளப்பட்டுள்ள சூழலில், தொழிலாளர்கள் மிகப் பெரும் வேலை நிறுத்த போராட்டத்திற்கு தயாராகி வருகின்றனர். தொழிலாளர்கள்  வேலை நிறுத்தம் ஏன்? அரசு போக்குவரத்து  கழகங்கள் என்பவை குறைந்த கட்டணத்தில் மக்களுக்கு போக்குவரத்து சேவை செய்யத் தான் உருவாக்கப்பட்டன! எந்த தனியார் பேருந்துகளும் செல்ல விரும்பாத தடங்களில் எல்லாம் அரசு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இந்த வகையில் குக்கிராமங்கள் தொடங்கி, குறைந்த மக்கள் வாழ்கின்ற ...