அறிவார்ந்த, சமூக அக்கறை கொண்ட வாசகர்களால் நிரம்பி வழிந்தது அரங்கு! சமூகத்தின் பல முக்கிய ஆளுமைகள் பார்வையாளர்களாக வந்திருந்து அமைதியாக விழா நிகழ்வை ரசித்தனர்! கேள்வி – பதில் நிகழ்ச்சியில் வாசகர்கள் அதிகமாக பங்கெடுத்தனர். இரண்டரை மணி நிகழ்வில் ஒவ்வொரு மணித்துளியும் மிகப் பயனுள்ளதாக அமைந்தது..! மிகச் சிறப்பாக நடந்தேறியது! நிகழ்சிக்கு பரவலாக நண்பர்கள் வந்திருந்தனர். மாலை ஐந்தரை மணி நிகழ்வுக்கு நாலரை மணியில் இருந்தே வாசகர்கள் வரத் தொடங்கிவிட்டனர். ஐந்தரை மணியில் இருந்து ஆறு மணி வரை நவதானிய சுண்டல், குதிரைவாலி பாயாசம் ...