எதிர்கட்சிகள் ஒன்றிணைய அடித்தளமிட்டவரான நிதிஸ்குமார், இந்தியா கூட்டணியில் இருந்து விலகுவதை தனித்து முடிவெடுத்தார் என்றாலும், அந்த முடிவுக்கான சூழல்கள் அங்கு இருந்தன. அதற்கு காங்கிரஸ் பிள்ளையார் சுழி போட்டது ஏன்..? பாஜகவை வீழ்த்துவதில் ஒரு முன் களவீரனாக காங்கிரஸ் இருக்கிறதா..? ஊசலாட்ட மனநிலை கொண்டவர் தான் நிதிஸ்குமார்! ஆயினும், பாஜகவின் பாசிசத்தால் பாதிக்கப்பட்டு ஒரு மாற்று அவசியம் தேவை என அவர் தான் முதன்முதலாக எதிர்கட்சிகளை ஒன்றிணைக்க ஆர்வம் காட்டினார்! அவர் முயற்சியில் தான் பல மாநில கட்சிகள் இந்த அணியில் சேர்ந்தனர்! ஆனால், ...