படு எதிர்பார்ப்புடன் பார்க்கப்பட்ட உலக கோப்பையில் இந்திய அணி தோல்வி பெற்றதற்கு என்ன காரணம்? இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் வெற்றி, தோல்விகளில் அதிக உணர்ச்சிவசப்படுவது எதனால்? கம்மின்ஸ் திமிரானவரா? உலக கோப்பை விளையாட்டு நிகழ்வை அணுவணுவாக ரசித்து விமர்சிக்கிறார், அ.சுகுமாரன்! ‘’மைதானத்தில் இருக்கும் 1 லட்சத்து 30 ஆயிரம் இந்திய ரசிகர்களை மௌனமாக்க விரும்புகிறேன்’’ என்று போட்டிக்கு முன்பு பேட்டியில் கூறிய ஆஸ்திரேலிய கேப்டன் பேட் கம்மின்ஸ் இப்போது ஆஸ்திரேலிய ஊடகங்களில் அதிகம் பாராட்டப்பட்டு வருகிறார். அவர் சொன்னது போலவே ஆஸ்திரேலியா போட்டியில் வென்று இந்திய ...