மேல்தட்டு வர்க்கத்தின் நலனுக்கான ஐ.ஐ.டியில் இசைப் பயிற்சிகள் தரவுள்ளாராம் இளையராஜா! இளையராஜா என்ற இசைஞானி உருவானது எப்படி? அவரது வளர்ச்சியின் முழுமையான பின்னணி என்ன? இன்றைக்கு அவரைப் பயன்படுத்திக் கொள்ளத் துடிப்பவர்கள் யார்? என்ன நடந்து கொண்டிருக்கிறது..? ‘மேஸ்ட்ரோ இளையராஜா இசை பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையம்’ அமைப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம், சென்னை ஐஐடி மற்றும் இளையராஜா மியூசிக் மற்றும் மேனேஜ்மென்ட் பிரைவேட் லிமிடெட் நிறுவனம் இடையே கையெழுத்தாகியுள்ளது. மிகப் பிரம்மாண்டமாக கட்டி எழுப்பப்படவுள்ள இந்த சிறப்பு மையம், ஒரு ஆண்டில் முழுமையாக செயல்பாட்டுக்கு ...