இன்றைய இளம் சமூகத்தினரிடம் பரவலாக காணப்படுப்படுவது அனைவரிலும் ‘நானே ஆகச் சிறந்தவன்’ என்ற நினைப்பாகும்! “தான்சிறந்தவன்”என்று நிருபிக்க துடிக்கும் பெருமுனைப்பு தான்! எல்லையில்லா இந்தப் பேராசை அகங்காரமாகி, அனைவரில் இருந்தும் ஒருவரை தனிமைப் படுத்த வல்லதாகும்! கோடிக்கணக்கான மனிதர்களை விட உயர்ந்தவனாக தனக்கான இடத்தை நிரூபிக்க வேண்டும் என்பதாக தன் முனைப்பு துடிக்கிறது. அந்த வார்த்தைக்காக உடல்அளவிலும், மனதளவிலும் நிறைய வேலைகள் மனிதன் செய்ய நினைக்கிறான். இப்படி தன்னைத்தானே செதுக்கும் மனிதர்களை சமூகம் எப்பொழுதும் பார்த்து கடந்து சென்று கொண்டே இருக்கும் இந்த உலகிற்கு ...