விஜய்யின் “லியோ” படம் கழுதைப் புலிகளை பற்றி தவறான சித்திரத்தை சமூக தளத்தில் உருவாக்குகிறது! உண்மையில் இவை இயற்கையின் பாதுகாவலன். படு ஆபத்தான விலங்கில்லை! அதே சமயம் மனிதன் நட்பாக்கி கொள்ளும் விலங்குமில்லை. இவற்றின் இயல்புகள், செயல்பாடுகள் சுவாராஷ்யமானவை; ‘ஹைனா’ எனப்படும் கழுதைப் புலிகள் ஓர் தனித்துவமான விலங்கு. தற்போது இவை மிகவும் அரிதாகி வருகிறது. இவைகளைக் குறித்து அறிவியல் பூர்வமாகவும், உயிரின வரலாற்றுடனும் அறிந்து கொள்வது நல்லது! விஜய் நடிப்பில் வெளியான ” லியோ “திரைப்படம் பார்த்த இளம் குழந்தைகள் கொடூரச் சண்டைகளில்  ...