கடவுள் தான் டிரேட்மார்க், பக்தி தான் மூலதனம், கோவில்கள் தான் அள்ளக் குறையாத சுரங்கம் என்று செயல்படுவதற்காகவே அரசியல் அதிகாரத்திற்கு ஏங்குகிறது இந்தக் கூட்டம். அத்துமீறி அநீதிகளை செய்பவனே அங்கு அடுத்த கதாநாயகன்! களவாணி கார்த்திக்கை களத்தில் இறக்கியதே ஒரு திட்டமிட்ட சதி தான்! இது ஒரு பகல் கொள்ளை! கடைந்தெடுத்த அயோக்கியத்தனம்! ஊருக்கோ கோயிலுக்கோ எந்த சம்பந்தமும் இல்லாமல் எங்கோ இருந்து வந்த ஒருத்தன் வசூல் வேட்டை நடத்தி பணத்தை அள்ளிக்கிட்டுப் போவான். அதை பார்த்துட்டு சும்மா இருக்கணும் மக்களும்,அரசாங்கமும்! மோசடியாளனை கைது ...