எங்கெங்கும் ஜேசிபியின் சீற்றம்! வேறெந்த ஆட்சியிலும் காணாத வகையில் குடியிருப்புகள் அகற்றம் என்பது  தமிழகத்தில் நாளும், பொழுதுமாக இந்த ஆட்சியில் அரங்கேறி வருகின்றன! அதே சமயம் செல்வாக்கானவர்களின் ஆக்கிரமிப்பு விவகாரத்தில் நீதிமன்றம் தீர்ப்பு தந்தால் கூட, அரசு அசைந்து கொடுப்பதில்லை; விபரமாவது; செங்கல்பட்டு மாவட்டம் அனகாபுத்தூரின் டோபிகானா தெரு , எம்.ஜி.ஆர் நகர், காயிதே மில்லத் தெரு, சாந்திநகர், தாய்மூகாம்பிகை நகர், டோபிகானா தெரு உள்ளிட்ட பகுதிகளில் மூன்று தலைமுறைகளாக வசித்து வரும் குடியிருப்புவாசிகளை நீர்நிலை ஆக்கிரமிப்பு எனக்கூறி வலுக்கட்டாயமாக வெளியேற்றி வருகிறது திமுக ...