காந்தி இல்லாத இந்தியாவை கட்டமைக்க காய் நகர்த்துகிறது பாஜக அரசு!  ஹிந்து ராஷ்டிராவிற்கு முக்கிய தடையே காந்தி அமைப்புகளும், காந்தியச் சிந்தனைகளுமே எனக் கருதி அவற்றை படிப்படியாக காலி செய்கின்றனர். காந்தியின் கொள்ளுப் பேரன் துஷார் காந்தி கைது, சர்வமதப் பிரார்த்தனைக்கு தடை.. என விரிகிறது சர்வாதிகாரம்! குஜராத் வித்யா பீடம் என்பது காந்தியால் நிறுவப்பட்ட 103 ஆண்டு கால ஸ்தாபனமாகும். இங்கு காந்தி உயிரோடு இருந்த போது, சர்வமதப் பிரார்த்தனை கூட்டங்களை தினசரி நிகழ்த்துவார். இதில் இந்தியாவில் உள்ள முக்கிய மதங்களின் பிரார்த்தனைப் ...