இந்தியாவை மதவெறி கூடாரமாக்க ஆட்சி அதிகாரத்தை மிகத் தவறாக பாஜக அரசு பயன்படுத்துவது சைனிக் பள்ளிகள் விவகாரத்தில் சந்தேகமின்றித் தெரிகிறது. அதிலும், இந்திய ராணுவத்தை இந்துத்துவ மதவெறி ராணுவமாக கட்டமைக்க – பிஞ்சிலேயே நஞ்சை விதைக்க – இப்படியும் செய்கிறார்களே…! 1961 ஆம் ஆண்டே தோற்றுவிக்கப்பட்ட சைனிக் பள்ளிகள் என்பவை முழுக்க, முழுக்க அரசுப் பள்ளிகளாகத் தான் செயல்பட்டன. இதில் பாரபட்சமற்ற முறையில் பாடத் திட்டங்களும், பயிற்சிகளும் வழங்கப்பட்டன. ஆனால், பாஜக ஆட்சிக்கு வந்ததும், அவற்றை அரசிடம் இருந்து விடுவித்து தனியார் அமைப்பிடம் தரும் ...