கூச்சமில்லாமல் பொய் பேசுவதில் ஜெயமோகனுக்கு நிகராக யாருமில்லை! சமஸ்கிருத தொல் நூல்களெல்லாம் 18 ஆம் நூற்றாண்டில் ஜெர்மனியில் மொழியாக்கமானதாம்! ஜெயமோகனுக்கும் உண்மைக்கும் துளியாவது சம்பந்தமுண்டா..? தமிழில் தொல் நூல்களே இல்லையா? வெளி நாட்டாரால் அதிகம் கொண்டாடப்பட்ட மொழி எது..? இன்றைய தமிழ்ச் சூழல், சிந்தனையாற்றல் நிறைந்த இளையவர்களை உருவாக்கும் அறிவுபூர்வமான கல்விச் செயல்பாடுகளில் பெரிதும் “நோஞ்சானாகவே” உள்ளது. இவ்வாறான அவலச் சூழ்நிலையையும் மீறி சிந்திக்கத் தொடங்கும் இளைஞர்களின் சிந்தையைக் குழப்பி விடுவதையே தொழிலாகக் கொண்டு செயல்பட்டு வருகின்ற, பல துறைகளைச் சேர்ந்த மனசாட்சியற்ற மனிதர்களும் ...