தமிழக வெற்றிக் கழகமாம்! கட்சியின் பெயரிலேயே ஒரு செய்தி இருக்க வேண்டாமா?  விஜய் அரசியலில் இறங்குகிறாரா? அல்லது இறக்கப்படுகிறாரா? ஆனால், அரசியலில் ஈடுபடுவதற்கான அடிப்படைத் தகுதிகள் விஜய்க்கு இருக்கிறதா?  அவருடைய வருகையால் பயன் யாருக்கு? பாதிப்புகள் யாருக்கு? அதென்ன தமிழகம்? தமிழ்நாடு என ஏன் குறிப்பிட முடியவில்லை..? குறிப்பிட்டால் உங்க பின்னணியில் இருப்பவர்களுக்கு பிடிக்காதோ..? ஆனால், ஒன்று! இது சரியான தருணம் தான்! அவரே குறிப்பிடுவதைப் போல மக்கள் ஒரு நல்ல அரசியல் கட்சிக்கு காத்திருக்கின்றனர் என்பது உண்மை தான்! விஜய் தன் அறிக்கையில், ...