நமது நீதிமன்றங்களில் சுமார் 5 கோடி 50 லட்சத்திற்கு மேற்பட்ட வழக்குகள் தேங்கியுள்ளன! பாட்டன் போட்ட வழக்கை பேரன் நடத்தும் நிலைமைகள்! வழக்கிற்காக வாழ்க்கையை தொலைத்தவர்கள் அதிகம்! ஏன் வழக்குகள் தேங்கின்றன?  நீதித் துறைக்குள் நிலவும் சிக்கல்கள் என்ன? விடுதலை அடைந்து 75 ஆண்டுகள் கடந்த பிறகு செம்மையான அரசியல் சாசனத்தை பெற்ற இந்திய மக்கள் 1950 ஆண்டு முதல் இந்திய உச்ச நீதி மன்றத்தின் தலைமையில் இந்திய நீதி துறை செயல்பட தொடங்கியதை கவனித்து வருகிறார்கள். எத்தனையோ வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்புகளை உச்ச ...