இந்த நாவலில் வரும் தன் நம்பிக்கையுள்ள அசாத்தியமான மனஉறுதி கொண்ட தன்மான பெண் பாத்திரமான காமாட்சி, வாசகர்கள் மனதில் என்றென்றும் வாழ்வாள்! சுதந்திரத்திற்கு முந்தைய தமிழகத்தின் சமூக வாழ்வியலையும், சரித்திர நிகழ்வுகளையும் ஒரு சேர தரிசிக்கத் தருகிறார் பாவை சந்திரன். ஒன்றுபட்ட தஞ்சாவூர் மாவட்டத்தின், கிழக்குப் பகுதியின், அறுபது ஆண்டு கால வரலாற்றை இந்த நூல் பேசுகிறது. நாகப்பட்டினத்தை மையமாகக் கொண்டு இருபதாம் நூற்றாண்டின் முற்பகுதியில் இருந்து, விடுதலை வரை நடந்தவைகளை இந்த நாவல் சொல்லுகிறது. காமுவிற்கு பெண் பார்ப்பதில் கதை தொடங்குகிறது. மனைவியை ...