நாட்டுக்கு சுதந்திரம் கிடைத்தும் நமது தாய்மொழி தமிழுக்கு  கிடைக்கவில்லை. நீதிமன்றத்திற்குள் நுழைய முடியாத மொழியாகவே இன்னும் மாநில மொழிகள் உள்ளன! மக்களுக்காகத் தான் சட்டமும், நீதியும் அதனை உறுதி செய்ய வேண்டிய நீதிமன்றங்களும் இருக்கின்றன. அவை மக்கள் மொழியில் இயங்க மறுப்பது ஏன்..? தமிழ்நாட்டில் உள்ள உயர்நீதிமன்றத்தில் நீதியைப் பெற முதலில் ஆங்கிலம் படிக்க வேண்டும். பின்னர் தான் நீதி. இதற்கு எதிராக எத்தனை போராட்டங்கள் நடந்துள்ளன. எதற்கும்  ஒன்றிய அரசு அசைந்து கொடுக்கவில்லை. ஆங்கிலம் தெரியாத காரணத்தால், ‘தன் வழக்கில் என்ன நடக்கிறது?’ ...