முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு தற்போது கல்வித் துறையில் கடும் நெருக்கடிகள்! நம் சமுதாயத்தை பல நூற்றாண்டு பின்னுக்கு இழுக்கும் சூட்சும முயற்சிகள் கல்வித் துறையில் கட்டி எழுப்பப்படுகின்றன, ஆட்சியாளர்களால்! இதை மெளனமாக வேடிக்கை பார்க்க முடியாத கல்வியாளர்கள் செய்யப் போவது என்ன..? கல்விக்கான வாய்ப்பு சுருக்கப்படுகிறது, நிதி ஒதுக்கீடு குறைக்கப்படுகிறது, கல்வியின் தன்னாட்சி உரிமை பறிக்கப்படுகிறது..! கல்வியை முழுக்க, முழுக்க தனியார் மயம், வணிகமயம் ஆக்குவதற்கான மடைக் கதவுகள் திறந்து விடப்பட்டிருக்கின்றன. ஆசிரியர்கள், பேராசிரியர்கள் முதலானோர் வெறும் ஒப்பந்த கூலிகளாக பார்க்கப்படும் அவலங்கள் அரங்கேறிக் ...