எந்த ஒரு இயக்கமும் ஜனநாயகத்திலும்,வெளிப்படைத் தன்மையிலும் எவ்வளவு உறுதியோடு இருக்கிறது என்பதைப் பொறுத்துத் தான் அது குறித்த மதிப்பீட்டிற்கு நாம் வரமுடியும்! பாராளுமன்றத்தில் சட்ட மசோதாக்களை அறிமுகப்படுத்தி விவாதித்து, விவாதத்தின் பயனா சில திருத்தங்கள்,மாற்றங்களைச் சேர்த்து முழுமைப்படுத்துவது என்பது தான் இதுவரையிலுமான மரபாகும்! ஆனால், இந்த மரபைத் தூக்கிவீசி எறிந்துவிட்டு, நான் வைத்தது தான் சட்டம். விவாதத்திற்கே இடமில்லை என்று பாஜக அரசு செயல்படுவதை PRS Legislative Research அமைப்பு நடத்திய ஆய்வு தெரிவிக்கிறது. முந்தைய காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முன்னணி ஆட்சியில் சட்ட மசோதாக்கள் எவ்வாறு ...