வாழும் இடத்தையும், உடமைகளையும் துறந்து இழப்பதற்கு ஏதுமற்று, அகதிகளாக வாழும் பாலஸ்தீனர்கள் தஞ்சமடைந்துள்ள காசா மீது கணக்கற்ற குண்டுமழை பொழிந்த வண்ணமுள்ளது இஸ்ரேல்! 35,000க்கும் மேற்பட்ட மக்களை கொன்ற பிறகும், அவர்களின் கொலைவெறியை யாராலும் தடுக்க முடியவில்லையே, ஏன்? தற்போது காசா பகுதியின் தென் கோடியில் உள்ள நகரமான ரஃபா விற்குள் இஸ்ரேலிய ராணுவம் நுழைந்து, அங்குள்ள அப்பாவி மக்களை வலுக்கட்டாயமாக விரட்டி அடிக்கிறது! போக்கிடம் ஏதுமின்றி மூட்டை முடிச்சுகளுடன் லட்சக்கணக்கான பாலத்தீனிய மக்கள் நகரத்தை விட்டு வெளியேறுகின்றனர். கடந்த அக்டோபர் 7 ல் ...
பாலஸ்தீன ஆக்கிரமிப்பை முன்னெடுக்கும் பாசிச இஸ்ரேலிய அரசாங்கத்தின் போர்வெறியை யூதர்களின் இஸ்ரேலிய கம்யூனிஸ்ட் கட்சி எப்படி அணுகுகிறது..? சொல்லொண்ணா துயரில் செத்து மடியும் அரேபியர்கள் விஷயத்தில் பாலஸ்தீன கம்யூனிஸ்ட் கட்சி அணுகுமுறை என்ன? நாட்டுக்கு நாடு வேறுபடுகிறதா? பாலஸ்தீனத்தில் உள்ள அரேபியர்களை பிரதி நிதித்துவப்படுத்தும் பாலஸ்தீன கம்யூனிஸ்ட் கட்சியின் அறிக்கை; பாலஸ்தீன கம்யூனிஸ்ட் கட்சியின் அறிக்கை காஸா பகுதியில் உள்ள எமது மக்கள் மீதான தாக்குதல் தொடங்கியதில் இருந்து, அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளின் இஸ்ரேல் ஆதரவு போக்கு ...
வந்தேறி இஸ்ரேல் யூதர்கள் இன்று பாலத்தீனம் முழுவதையும் ஆக்கிரமித்து கொண்டு, மண்ணின் மக்களை மிக மோசமாக நடத்துகின்றனர்! இதனால், பாலஸ்தீனத்தின் ஹமாஸ் போராளிகள் திருப்பி அடித்துள்ளனர்! அதிபயங்கரமான அழிவுகளை, ‘பயங்கரவாதிகளை ஒடுக்குகிறோம்’ என்பதாக இஸ்ரேல் செய்கிறது…! சனிக்கிழமை ( அக்டோபர்-7) அதிகாலை இஸ்ரேலுக்கு எதிராக ஹமாஸ் தொடங்கிய யுத்தம். இஸ்ரேலை நிலைகுலையச் செய்துள்ளது. தரை கடல் மற்றும் வான் வழியாக தங்களது தாக்குதலை நடத்திய ஹமாஸ் தலமையிலான பாலத்தீன விடுதலை வீர்ர்கள் பெரிய தாதாவாக தன்னை உலகிற்கு காட்டி வலம் வந்து கொண்டிருந்த இஸ்ரேல் ...