உண்ணாவிரதம், தர்ணா, ஒரு மணி நேர ஆர்ப்பாட்டம், பேரணி, கறுப்புக் கொடி காட்டி எதிர்ப்பை தெரிவிக்கும் அமைதியான எதிர்ப்பு, கண்டனக் கூட்டம்.. என எல்லாவற்றுக்கும் தடை என்றால்..எப்படி? ஜனநாயகத்தில் போராடுவதற்கான உரிமை தொடர்ந்து மறுக்கப்படுமானால், அது உச்சகட்ட கொந்தளிப்பை உருவாக்காதா..? “நீ சொல்வதோடு நான் உடன்படாமல் போகலாம். ஆனால் அதைச் சொல்லும் உரிமை உனக்கு உண்டு” என்பது பிரெஞ்சு சிந்தனையாளரான வால்டேரின் புகழ்பெற்ற வசனமாகும். நமது அரசியல் சாசனம்,  பேச்சுரிமையையும், போராட்ட உரிமையையும் நமக்கு அளித்துள்ளது. அதனை உறுதி செய்ய வேண்டிய தமிழக அரசின் ...