ஆர்.எஸ்.எஸ் பேரணிக்கான எதிர்ப்பில் கூட்டணிக் கட்சிகளிடம் இருந்து தனிமைப்பட்டு விட்டது திமுக! சமீபகாலமாக பாஜக எதிர்ப்பில் பம்முவது, மறைமுகமாக பாஜகவின் மக்கள் விரோத கொள்கைகளை அமல்படுத்துவது எனச் செயல்பட்டு வரும் திமுகவுடன் தொடர்ந்து கூட்டணி உறைவைப் பேண முடியுமா? என்பதே தற்போதைய பிரச்சினை! ஆர்.எஸ்.எஸ்.பேரணி தொடர்பாக தமிழகத்தில் மிக எழுச்சியான சமூக நல்லிணக்கப் மனித சங்கிலியை திமுகவின் கூட்டணிக் கட்சிகள் நடத்தியுள்ளன! ஆர்.எஸ்.எஸ் மற்றும் இந்துத்துவ இயக்கங்கள் தமிழகத்தில் மிக வலுவாக காலூன்ற வியூகம் அமைத்து செயலபடும் இந்த சூழலில் அதை எப்படி தடுத்து ...