மாட்டிறைச்சி விற்பனைக்கான மத்திய அரசின் தடையை  தமிழகத்திலும் அமல்படுத்திட பல நெருக்கடிகள் தரப்படுகின்றன. சிலரது தூண்டுதலால் தமிழகத்தின் மிகப் பெரிய சந்தையிலேயே மாட்டிறைச்சி விற்பனைக் கூடங்கள் இடிக்கப்பட்டுள்ளன. சில நகராட்சிகளில் மாட்டிறைச்சி விற்போர் மிரட்டப்பட்டு, சிறையில் தள்ளப்படுகின்றனர்! தமிழகத்தின் மிகப் பெரிய சந்தைகளில் முக்கியமானது ஈரோடு மாவட்டம் புன்செய் புளியம்பட்டி வாரச் சந்தையாகும். கோவை, ஈரோடு, திருப்பூர், நீலகிரி என நான்கு மாவட்டங்களை இணைக்கும் இடம் இது என்பதால், நான்கு மாவட்ட மக்கள் மட்டுமின்றி, கேரளாவில் இருந்தும் வாடிக்கையாளர்கள் வருவர்! மக்கள் கூட்டம் நிறைந்து ...