ஆருத்ரா கோல்டு, ஐ.எப்.எஸ்..போன்ற மோசடி நிறுவன வரிசையில் ஹிஜாவு அசோசியேட்டும் இணைந்துள்ளது. இந்த மோசடி நிறுவனங்களில் முதலீடு செய்தவர்கள் சுமார் 40 பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். ஆட்சியாளர்களுக்கும், காவல்துறைக்கும் தெரியாமலா இவ்வளவு மோசடிகள் அரங்கேறுகின்றன..? காலம்தோறும் இது போன்ற மோசடி நிறுவனங்கள் முளைத்து வந்து வந்து நம்ப முடியாத அளவு வட்டிப் பணம் தருவதாக விளம்பரபப்டுத்தி வசூல் வேட்டை நடத்துவதும்,பின்னர் வாரிச் சுருட்டிக் கொண்டு ஓடுவதும் தொடர் நிகழ்வாக உள்ளது. ஒவ்வொரு முறையும் ஏமாற்றும் நிறுவனத்தின் பெயர் மாறுகிறது. ஏமாற்றும் முறை மாறுகிறது! ...