என்ன முட்டாள்தனம்? இங்கிலாந்தின் முதல் இந்தியா வம்சாவளிப் பிரதமராம்! இந்தியாவின் மருமகனாம்! இந்திய பாராம்பரியத்தில் வந்தவர் இங்கிலந்து பிரதமராகிவிட்டாராம்! இங்கிலாந்தில் சிறுபான்மையின இந்து ஒருவரை பிரதமராக்கி விட்டார்களாம்! எப்படியெப்படி எல்லாம் தப்பிதமான புரிதல்கள்! இங்கிலாந்தின் பிரதமராக ரிஷி சுனக் பதவி ஏற்றுள்ளார்! அரசியல் தலைவர்களும், பத்திரிகைகளும் போட்டி போட்டுக் கொண்டு அவரது தேர்வு குறித்து தங்கள் பார்வைகளை, விமர்சனங்களை வைக்கின்றனர். ‘இந்தியாவின் மருகன் பிரிட்டன் பிரதமரானார்’, ‘பிரிட்டனின் முதல் இந்து பிரதமர்’, ‘இந்திய வம்சாவளியில் வந்த முதல் பிரிட்டன் பிரதமர்’, ‘சிறுபான்மையினர் ஒருவரை இங்கிலாந்து ...