போலி லாட்டரி சீட்டு விற்பனையின் சக்கரவர்த்தியாகத் திகழும் மார்ட்டினின் அரசியல் வியூகங்கள் அசத்தலானவை!  அவரது குடும்பம் பல கட்சிகளிலும் ஊடுருவி ஆதிக்கம் செலுத்த முயற்சிக்கிறது. அந்த வகையில் ஆதவ் அர்ஜுனா விசிகவில் சேர்ந்ததையும், தற்போது ரெய்டுகள் நடந்ததையும் அலசுகிறது இந்தக் கட்டுரை; இந்தியாவின் அனைத்து தேசிய, மாநில கட்சிகளுக்கும் கொள்ளை கொள்ளையாக நிதி கொடுத்து தன் லாட்டரி சாம்ராஜ்யத்தை நிறுவியுள்ளவர் தான் மார்ட்டின்! லாட்டரி சீட்டுக்களை பெரும் எதிர்பார்ப்போடு வாங்கி தொடர்ந்து ஏமாறும் ஏழை, எளிய தொழிலாளிகள் தாம் இவரது மூலதனம். எத்தனை உழைத்தாலும் ...

லாட்டரி தடை இருந்தும் தமிழ்நாட்டில் கள்ளத்தனமாக லாட்டரி விற்பனை செய்து பல கோடிகளை சம்பாதிக்க திமுக அரசு செய்து தந்த சலுகை மட்டுமல்ல, தற்போது மார்ட்டின் குறிவைக்கப்பட்டதற்கு! அதையும் தாண்டி, திமுக தலைமை குடும்பத்திற்கும், மார்டின் குடும்பத்திற்குமான நெருக்கத்தின் பின்னணி! சான்டியாகோ மார்டின் கோவையை பூர்வீகமாகக் கொண்ட ஒரு லாட்டரி அதிபர். மியான்மரில் (பர்மா) 13 வயதில் குழந்தை தொழிலாளியாக வாழ்க்கையை தொடங்கிய மார்ட்டின் இந்தியா திரும்பி, மார்ட்டின் லாட்டரி ஏஜென்சி லிமிடெட் என்ற சிறிய லாட்டரி கடையை 1988-ஆம் ஆண்டு திறக்கிறார்.1991 ல் ...