வங்கிகளில் வேலைநிறுத்தம் நடைபெறுவது வழக்கம்தான்; ஆனால் இந்த முறை வித்தியாசமான காரணத்திற்காக நடைபெறுகிறது. இந்தியா முழுவதும் உள்ள ஒரு இலட்சம் வங்கிக் கிளைகளில், காலியாக உள்ள ஒன்றரை இலட்சம் பணியிடங்களை நிரப்பக்கோரி அகில இந்திய வங்கி ஊழியர் சங்கம் வேலைநிறுத்தத்திற்கு அறைகூவல் விடுத்துள்ளது என்கிறார் அகில இந்திய வங்கி ஊழியர் சங்கத் தலைவரான சி.எச். வெங்கடாச்சலம். கேள்வி : தமிழக அரசு வெள்ள நிவாரணத்தொகையை வங்கிக் கணக்கில் செலுத்த வேண்டும் என்று நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறுவதைப்பற்றி என்ன நினைக்கிறீர்கள் ! பதில் ...