‘வேளாண்மைக்கான தனி பட்ஜெட் போட வேண்டிய தேவை என்பதே வேளாண் சார்ந்த உற்பத்தி நிறுவனங்களின் நிர்பந்தத்தின் விளைவே’ என இந்த பட்ஜெட்களே துல்லியமாக காட்டிக் கொடுத்து விடுகின்றன! பட்ஜெட்டின் ஒவ்வொரு நகர்வும், ஒவ்வொரு திட்டமும் வேளாண் துறையின் பெரு நிறுவனங்களை கருத்தில் கொண்டே உள்ளன..! தமிழ்நாடு அரசு வேளாண்மைக்கான தனித்த பட்ஜெட் வெளியிடுவதற்கு பலரும் பாராட்டுக்களை தெரிவிக்கிறார்கள்! அதிலும், திமுக ஆட்சி தான் இதை அறிமுகப்படுத்தியது என்பதும், வேளாண்மைக்கென தனியாக 42,281.88 கோடிகள் ஒதுக்கி பட்ஜெட் போட்டுள்ளது விவசாயிகளின் மீதான அக்கறையைக் காட்டுவதாகவும் பரவலாக ...