பாஸிசத்திற்கும்,மனித நேயத்திற்கும் இடையே நடக்கும் உளவியல் போராட்டம் அழகான திரைமொழியில் ஹிட்லரின் ஜெர்மானிய காலகட்ட சமூகத்தின் வழியே சொல்லப்பட்டிருக்கிறது! இன்றைய சமகால இந்தியாவின் நிகழ்வுபோக்குகளோடு நாம் இதை ஒப்பீடு செய்து தெளிவு கொள்ளத்தக்க வகையில் இருப்பதால்,இதன் காலப் பொருத்தப்பாடு சிலிர்க்கவைக்கிறது! இரண்டாம் உலகப்போர் நடந்துகொண்டிருக்கிறது. ஹிட்லர் உலகையே வெற்றி கொள்ளப் போவதாக எல்லாரும் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்; அவனது புகழ்பாடுகிறார்கள். ஜெர்மனியில் வசிக்கும் பத்து வயது நாயகனான சிறுவன் ஜோஜோவும் அப்படித் தான் நம்புகிறான். அப்போது நடந்த சம்பவங்களை ஜெர்மானிய சிறுவன் பார்வையில் இப்படம் சித்தரிக்கிறது. ...